கள்ளக்குறிச்சி | சோதனையில் சிக்கிய 1.3 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஈரியூர் கிராமத்தில் கீழ்குப்பம் போலீசார் சோதனை நடத்தினர். இதில், சத்தியா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக் கடையில் மூன்று பாக்கெட் ஹான்ஸ் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேப்பூர் தாலுகாவை சேர்ந்த வளர்மதி, முருகேசன் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து முக்கிய குற்றவாளியான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த 13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ போதை பாக்குகள், ஸ்கார்பியோ, பொலிரோ பிக் அப் உள்ளிட்ட இரண்டு நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.