you tuber
you tuber ilakkiya FB

யூடியூபர் இலக்கியா தற்கொ** முயற்சி.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. நடந்தது என்ன?

அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்க தொடங்கிய
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் இலக்கியா. இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறி, நேற்று நள்ளிரவு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறார் என்றும் அதிக அளவில் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது” என்றனர்.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்த நிலையில் உடன் இருந்த நபர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இலக்கியா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

you tuber
37 வயது பெண் கொலை | ”அந்த உண்மையை மறைத்ததால் கொன்றுவிட்டேன்” - வடமாநில இளைஞர் கொடுத்த வாக்குமூலம்!

இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கிய போலீசார், ”இலக்கியா அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர். இருப்பினும் இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் எனவும் இலக்கியா தரப்பிலிருந்து புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com