ஈரோடு | குடும்பத் தகராறில் கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி
செய்தியாளர்: D.சாம்ராஜ்
தாளவாடி அடுத்த மல்லன்குழியைச் சேர்ந்தவர்கள் தங்கவேலு (50) - ரேவதி (35) தம்பதியர். இவர்களுக்கு சுதிக்சன் (13) கபிலேஷ் (11) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக தனது இரு மகன்களுடன் ரேவதி மல்லன்குழியில் வசித்து வருகிறார்.
இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் ரேவதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கிடையே மல்லங்குழிக்கு வந்த தங்கவேலு தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதற்காக வந்ததாக கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ரேவதி, தங்கவேல் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரேவதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.