செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்.. இறங்கச்செய்து போலீஸார் செய்த சம்பவம்.. ஆடிப்போன போதை ஆசாமி!

செல்ஃபோன் டவரில் ஏறி, தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய போதை ஆசாமியை பேச்சுவார்த்தை நடத்தி இறங்கச் செய்த போலீஸார் கைது செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
drunken
drunkenfile image

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. 25 வயதான இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தன்னைத்தானே கத்தியால் கீறி காயம் ஏற்படுத்தி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும், பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுமார் 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி, அதிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பேர்ணாம்பட்டு டவுன், திருவிக நகரில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த அப்ரான் கான் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு கத்தியை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார். இந்த நிலையில் அப்ரான் கான் கொடுத்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

drunken
விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி இஸ்ரேலுக்கு கைகொடுக்கும் அமெரிக்கா.. ஹமாஸை எச்சரிக்கும் நெதன்யாகு!

மீண்டும் பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில் தான் வழக்கமாக ஏறும் செல்போன் டவரில் ஏறி உச்சிக்கு சென்ற பாபு, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்த பேர்ணாம்பட்டு போலீஸார் விரைந்து சென்று பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே வரவைத்துள்ளனர். இதனை நம்பி பாபு கீழே வந்த நிலையில், கைது செய்ய காவல்துறையினர், அப்ரான் கானை கத்தியால் குத்திய வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

drunken
Cricket World Cup | முதல் போட்டியில் கவனம் ஈர்த்த 5 வீரர்கள்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com