சடலமாக மீட்கப்பட்ட பெண்
சடலமாக மீட்கப்பட்ட பெண்pt desk

திண்டுக்கல் | எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - கொலையாளி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு வாரத்திற்கு பின்பு யார் அந்தப் பெண் என்று காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமைதி சோலை அருகே கடந்த 13.04.25 அன்று அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மதுரையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் எமகாலபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த ஒரு வருடங்களாக இருவரும் திண்டுக்கல்லில் இருந்த நிலையில், மாரியம்மாள் இரண்டு முறை கர்ப்பத்தை கலைத்ததாகக் கூறப்படுகிறது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்
சென்னை | பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது

இதைத் தொடர்ந்து மாரியம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரவீனை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், மாரியம்மாளை அமைதி சோலை அருகே கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் யார் என்று தெரியாத நிலையில் பெண்ணின் அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Arrested
Arrestedfile
சடலமாக மீட்கப்பட்ட பெண்
வாணியம்பாடி | தோல் தொழிற்சாலை இயந்திரம் விழுந்து விபத்து - கூலித் தொழிலாளி உயிரிழப்பு

இந்நிலையில், பிரவீன் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பிரவீன் எவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com