இரு ஓட்டல் ஊழியர்கள் கைதுpt desk
குற்றம்
சென்னை | பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஓட்டலில் பணிபுரியும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு தாக்குதல் நடத்தியதாக 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். கடந்த 17 ம் தேதி இரவு அப்பெண் ஓட்டலில் பணியில் இருந்தபோது, அதே ஓட்டலில் பணிபுரிந்து வரும் முகமது மின்னாஸ் அலி என்பவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
arrestPT DESK
இது குறித்து அப்பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார். இதானால், மின்னாஸ் அலி மற்றும் அதே ஓட்டலில் பணிபுரியும் அவரது நண்பர் தீபக்குமார் ஆகியோர் சேர்ந்து பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, முகமது மின்னாஸ் அலி அப்பெண்ணை தாக்கிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.