தேனி | தந்தை கடனை செலுத்தவில்லையென மகளுக்கு பாலியல் வன்கொடுமை; வீடியோவும் எடுத்து மிரட்டல்!

பெற்ற கடனை தந்தை திருப்பி செலுத்தாததால், அவரது மகளை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் சிலர். இதுதொடர்பாக அந்த தந்தை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு.
வன்கொடுமை
வன்கொடுமைகோப்புப்படம்

செய்தியாளர் - அருளாணந்தம்

தேனி மாவட்டத்தில், மணி என்பவரிடம் கடன் பெற்றுள்ளார் ஒருவர். கடன் பெற்றவரின் மகள் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், வாங்கியப் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை கடன் பெற்றவருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைமுகநூல்

இதனால் எட்டு மாதங்களுக்கு முன்பு கடன் கொடுத்த மணியின் தூண்டுதலின் பேரில் தேனியைச் சேர்ந்த பழனி, நவநீத், சுரேஷ், ஹரி ஆகிய நான்கு பேரும் சிவகங்கையில் வாழ்ந்து வந்த கடன் பெற்றவரின் மகளை காரில் கடத்தியுள்ளனர். பின் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்ஃபோனில் வீடியோவாகவும் பதிவுசெய்துள்ளனர் என கூறப்படுகிறது.

வன்கொடுமை
சென்னை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர்..வெளியேவந்து பக்கெட் தண்ணீரில்விழுந்த 11 மாத குழந்தை!

மேலும் “இதுபற்றி வெளியில் தெரிவித்தால் சமூகவலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம்” என அவர்கள் அப்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது அப்பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் தற்பொழுது 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைfreepik

அப்புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களும் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com