Police stationpt desk
குற்றம்
கடலூர் | நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற நபர் கைது
விருத்தாசலம் அருகே சட்ட விரோதமான நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், வேட்டைக்குச் சென்ற நபரை கைது செய்தனர்.
செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலகொல்லை பகுதியில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முத்து (35) நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துடன் வேட்டையாடுவதற்கு சென்றது தெரியவந்தது
இந்த நிலையில் முத்துவை கைது செய்து நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்தை பறிமுதல் செய்து ஆலடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஆலடி காவல் துறையினர் மூன்று பிரிவுகளை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.