கர்நாடகா: பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து காங். கவுன்சிலர் மகள் மீது கத்தி குத்து தாக்குதல்!

கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் கல்லூரியில் வைத்து கொடூரமாக குத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
neha
nehapt

கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹைமாத். இவரது மகள் நேஹா(21), கே.எல்.இ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல இன்று கல்லூரி சென்ற அவர், அதே பல்கலைக்கழகத்தில் அதே வகுப்பில் பயிலும் ஃபயாஸ் என்ற மாணவரால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானார். காதலிக்க மறுத்ததாக கூறி இந்த தாக்குதலை அவர் நடத்தியுள்ளார்.

இன்றைய தினம் நேஹா கல்லூரி சென்றபோது, கையில் கத்தியோடு வந்த ஃபயாஸ், நேஹாவை சரமாரியாக கொடூரமாக குத்தியுள்ளார். இதனால், படுகாயமடைந்த நேஹாவுக்கு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் கல்லூரியின் சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளது. மாணவி மீது தாக்குதல் செய்யப்பட்டதையடுத்து, ஃபயாஸ் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த தகவல் அறிந்த போலீஸார் திவிரமாக தேடி ஃபயாஸை கைது செய்தனர்.

neha
ஓட்டுப்போடாதவங்களை என்ன பன்ணலாம்.. மாணவர்களின் அசத்தல் ஐடியாக்கள்!

அவர் சிறு சிறு காயங்களோடு கைது செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான விசாரணையில், நேஹாவும் பயாஸும் காதலித்து வந்ததாகவும், சமீபமாக நேஹா, தன்னை தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், ஏற்பட்ட கோபத்தில்தான், நேஹாவை குத்தி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் ஃபயாஸ்.

இந்த விவகாரத்தில், பிசிஏ முதலே இருவரும் ஒன்றாக படித்து வந்த நிலையில், நேஹா தேர்வில் வென்று எம்.சி.ஏவில் சேர்ந்துள்ளார். ஆனால், ஃபயாஸ் இளநிலை படிப்பான பிசிஏவிலேயே தோல்வியடைந்ததாக தெரிகிறது. ஃபயாஸ் கொடுத்த வாக்குமூலம் உண்மைதானா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேவழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

neha
”தோனியை WC-க்கு கொண்டுவரலாம் தான்..ஆனால்” - விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்விக்கு ரோகித் நச் பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com