தொழிலாளி போக்சோவில் கைது
தொழிலாளி போக்சோவில் கைதுpt desk

கோவை | சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது!

கோவை அருகே 13 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: சுதீஷ்

கோவை மாவட்டத்தில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் பணி புரிந்தனர். தங்களது 13 வயது மகளுடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்களது மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர். பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

Arrested
Arrestedfile

இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராபர்ட் கிளைவ் என்பவர் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாளையில் பணியாற்றி வந்ததும் அவருடன் சிறுமி இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு? ராபர்ட் கிளைவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொழிலாளி போக்சோவில் கைது
திருச்செந்தூர் | நகைக்காக காவலரின் தாய் கொலை - இளம் பெண் கைது

விசாரணையில், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராபர்ட் கிளைவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com