லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவர் கைதுpt desk
குற்றம்
கோவை | தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக இருவர் கைது
கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 192 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தியாளர்: பிரவீண்
கோவையில் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் பொதுமக்கள் காவல்துறையின் நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும், பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும் வகையிலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரவடிகளை தணிக்கை செய்தும், ஆயுதங்கள் எதேனும் வைத்துள்ளார்களா என்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த ஷேக் இப்ராகிம், சுதர்சன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 192 லாட்டரி சீட்டுகள், ஒரு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் ;பரபரப்பை ஏற்படுத்தியது.