\
பெண்களை இழிவுப்படுத்திய இளைஞர்கள்
பெண்களை இழிவுப்படுத்திய இளைஞர்கள் முகநூல்

’ நீங்கள் ஓசியில்தானே பயணம் செய்கிறீர்கள்’ - பேருந்தில் பெண்களை இழிவுபடுத்திய இளைஞர்கள்!

அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற பேருந்து வடபழனி தனியார் பள்ளி அருகே வந்த போது ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர்.
Published on

சென்னையில் அரசுப் பேருந்தில் சென்ற பெண்களை ஓசியில் பயணம் செய்வதாக இளைஞர்கள் இழிவுபடுத்திப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற பேருந்து வடபழனி தனியார் பள்ளி அருகே வந்த போது 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர். ஏற்கெனவே அமர்ந்திருந்த மூதாட்டிகள் மற்றும் பெண்களை இருக்கையிலிருந்து எழுப்பிய அவர்கள், நீங்கள் ஓசிடிக்கெட்டில் தானே பயணம் செய்கிறீர்கள், நாங்கள் காசு கொடுத்து பயணிக்கிறோம் என இழிவு செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்துள்ளனர்.

பெண்களை இழிவுப்படுத்திய இளைஞர்கள்
பொள்ளாச்சி | அரசு பேருந்தில் இடம் பிடிக்க வீச்சருவாளை போட்ட நபரால் பரபரப்பு

இதைக் கண்டித்ததுடன் வீடியோவும் எடுத்த பெண் பயணி ஒருவரை ஆபாசமாக திட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இழிவான செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது, பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து, கைது செய்துவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து வடபழனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com