சென்னையில் மாற்றொரு அயனாவரம் சம்பவமா? சிறுமிக்கு நடந்த சொல்ல முடியாத கொடூரம்! விசாரணையில் பகீர்!

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், டெய்லர் கடைக்காரர் ஆகியோர் கைது.
போஸ்கோ
போஸ்கோபுதியதலைமுறை

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், டெய்லர் கடைக்காரர் ஆகியோர் கைது.

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் பெயின்டராக பணியாற்றி வருபவர் ராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மனைவியும், இவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் எனக்கூறப்படுகிறது.

இவர்களின் மூத்த மகள் அரசு பள்ளி ஒன்றில் 5 வகுப்பு முடித்து 6 ம் வகுப்புக்கு செல்லவுள்ளார். 11 வயதான இந்த சிறுமி நேற்று திருவேற்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது பாட்டி மற்றும் சித்தியிடம் தனக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் பிறப்புறுப்பில் வலிப்பதாகவும் கூறியுள்ளார்.

பாட்டி மற்றும் சித்தி விசாரித்த போது, தனது பெரியப்பா மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து இது போன்று நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி மற்றும் பாட்டி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளன. அங்கு மருத்துவர்கள் சிறுமி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி மற்றும் சித்தி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சிறுமியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுமியிடம், அவரது அண்ணன் முறை கொண்ட 16 வயதேயான பெரியப்பா மகன் திண்பண்டங்களை வாங்கி கொடுத்து சிறுமியை கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தததும், அதனை எதிர்வீட்டில் இருக்கும் மற்றோரு 16 வயது சிறுவன் பார்த்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

அதே போல, அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் டெய்லர் குமார் என்ற நபரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

பெரியப்பா மகனின் நண்பன் என சிலர் சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது. கடந்த 4 மாதங்களுக்கு மேல் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

சிறுமி இந்த கொடுமைகள் குறித்து இந்த தனது பெற்றோரிடம் பலமுறை தெரிவித்துள்ளார் என்பதும் தெரிவிக்க, மதுபோதைக்கு அடிமையான பெற்றோர் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தான் நேற்றும் சிறுமியின் பெரியப்பாவின் மகன் தவறாக நடந்தால் அவரால் வலி தாங்க முடியாமல் தனது பாட்டி வீட்டுக்கு சென்று விஷயங்களை கூறியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போஸ்கோ
அமெரிக்க நடிகர், மர்ம நபர்களால் சுட்டுக்கொலை - உதவியாளரை காப்பாற்ற தன் உயிரை கொடுத்தாரா?

போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், டெய்லர் குமார் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.

மேலும், போலீசார் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும் போலீசர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் வேறு யாரெல்லாம் இது போன்று சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர்? என வில்லிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com