அமெரிக்க நடிகர், மர்ம நபர்களால் சுட்டுக்கொலை - உதவியாளரை காப்பாற்ற தன் உயிரை கொடுத்தாரா?

அமெரிக்க நடிகரான ஜானி வெக்டர், தன் உதவியாளரை காப்பாற்ற நினைத்து முன்சென்ற நிலையில், அவரை துப்பாக்கிகள் துளைத்துவிட்டன
ஜானி வெக்டர்
ஜானி வெக்டர்எக்ஸ் வலைதளப்பதிவு

அமெரிக்க நடிகரான ஜானி வெக்டர் என்பவர் கடந்த வாரம் கார் திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் அவரது உதவியாளர் மீதுதான் திருடர்கள் குறிவைத்துள்ளனர் என்றும், இதையறிந்த நடிகர் ஜானி, உதவியாளரை காப்பாற்ற நினைத்து முன்சென்ற நிலையில், அவரை துப்பாக்கிகள் துளைத்துவிட்டன என்றும் சொல்லப்படுகிறது.

ஊடகங்களின் தகவலின்படி நடிகர் ஜானி வெக்டர் கடந்த 25ம் தேதி அதிகாலை முன்று மணிக்கு லாஸ் ஏஞ்சலில் உள்ள பார் ஒன்றிலிருந்து வெளியே வந்துள்ளார். பின் தனது கார் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அச்சமயம் முகமூடி அணிந்த திருடர்கள் மூவர், அவரது காரின் உபகரணங்களை திருட முயன்றுள்ளனர். அதை தடுக்க சென்ற சமயம் திருடன் ஒருவன் ஜானி வெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். அதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அவர் அங்கு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஜானி வெக்டர்
‘மயக்கம் என்ன’ கார்த்திக்-ஐ மிஞ்சிய Passion..3 வாரங்கள் மரத்தில் தங்கி வௌவால்களை படம்பிடித்த கலைஞர்!

இவரின் இறப்பிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘ஜெனரல் ஹாஸ்பிடல்’ என்ற ஹாலிவுட் படத்தில் பிராண்டோ கார்பின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் கவனம் பெற்றவர் இவர். தவிர ஸ்டேஷன் 19, வெஸ்ட்வேர்ல்ட் மற்றும் கால் ஆஃப் டூட்டி, வான்கார்ட் ஆகியவை இவரின் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன.

இந்நிலையில் சில அமெரிக்க ஊடகங்கள் இவரது மரணம் குறித்து வேறு சில தகவல்களை சொல்லிவருகிறது. அதன்படி இவர் பாரிலிருந்து வெளியே வந்த சமயம், இவரின் உதவியாளர் திருடர்களுடன் போராடியுள்ளார். அச்சமயம் திருடன் ஒருவன் இவரின் உதவியாளரை சுட முயன்றுள்ளான். உதவியாளரை காப்பாற்றுவதற்காக இவர் அந்த குண்டை தனது மார்பில் வாங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இதன் உண்மைதன்மை வெளிவரும் வரை இவரின் இறப்பு குறித்தான மர்மங்கள் விலகுவது கடினமே. இந்நிலையில் இவரை சுட்டுக்கொன்ற நபர்களை போலீசார் தேடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com