சென்னை | புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வானகரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போரூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானகரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மளிகை கடை ஒன்றில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போரூர் பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சசிகுமார் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மளிகை கடைக்கு குட்கா பொருட்களை விநியோகம் செய்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர்களிடம் இருந்து 30 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் குட்கா விநியோகம் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.