போலி கையெழுத்து மூலம் ரூ. 1.9 கோடி மோசடி – பங்குதாரர் உட்பட இருவர் கைது

போலி கையெழுத்து மூலம் ரூ. 1.9 கோடி மோசடி – பங்குதாரர் உட்பட இருவர் கைது
போலி கையெழுத்து மூலம் ரூ. 1.9 கோடி மோசடி – பங்குதாரர் உட்பட இருவர் கைது

பல தனியார் நிறுவனத்திற்கு மேன் பவர் சப்ளை செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் கையெழுத்தை போலியாக பதிவிட்டு 1 கோடியே 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் Nutec design பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த ஐந்து வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆர்கே.பாஸ்கர் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் கணக்கு பதிவாளராக இருந்த காமேஷ்குமார், நிறுவன பங்குதாரர் பாஸ்கருடன் சேர்ந்து சிறுக சிறுக பணத்தை கையாடல் செய்து வந்துள்ளனர்.

அதன் பிறகு ஹரிகிருஷ்ணன் நிறுவனத்திற்கு வரவேண்டிய காசோலைகள் மிகக் குறைவாக இருந்ததால் ஆடிட்டர் மூலமாக வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அதில், ஹரிகிருஷ்ணனின் கையெழுத்துடன் பல காசோலைகள் வௌ;வேறு நிறுவனத்திற்குச் சென்று உள்ளது. இதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன் தனது ஆடிட்டர் மூலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணைக்குப் பிறகு நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான பாஸ்கர் மற்றும் கணக்காளர் காமேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் ஆய்வாளர் சுமதி தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர்.

ஆர்கே.பாஸ்கர் என்பவர் சென்னை விநாயகபுரம் சூரப்பட்டு அருகே இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து அழைத்து வந்தனர். இதனிடையே பெரம்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்த மற்றொரு குற்றவாளியான கணக்காளர் காமேஷ்குமார் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவர்கள்இவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com