Police station
Police stationpt desk

சென்னை | வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை - சக தொழிலாளி கைது.. கொலையில் முடிந்த கிண்டல் பேச்சு

மாங்காடு அருகே வடமாநில தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மாங்காடு அருகே பரணிபுத்தூரில் உள்ள மரப்பட்டறையில் அணில் பாண்டே (42) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகர்கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (48) என்பவரும் வேலை செய்துள்ளார்.

இந்நிலையில், அணில் பாண்டே, குமாரின் செல்போன் மற்றும் சார்ஜரை எடுத்து வைத்துக்கொண்டு கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Arrested
Arrestedfile

இதையடுத்து நேற்று இரவு மது போதையில் வந்த குமார், உறங்கிக் கொண்டிருந்த அணில் பாண்டே தலையில் இரும்பு ராடால் அடித்துவிட்டு அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அணில் பாண்டே மண்டை உடைந்து கிடப்பதைக் கண்ட நபர்கள், அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர் ஆனால், அவர் இறந்து கிடப்பது தெரியவரவே மாங்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

Police station
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைந்த காவல் துறை!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார், அணில் பாண்டே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குமாரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com