மேலாளர் கைது
மேலாளர் கைதுpt desk

சென்னை: தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது

தாம்பரத்தில் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு மேலாளராக பணிபுரியும் ராஜராஜன் (37) என்பவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கைது
கைதுகோப்புப்படம்

இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இந்தப் புகாரின் பேரில் அலுவலக மேலாளர் ராஜராஜனை தாம்பரம் போலீசார் கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலாளர் கைது
பெண்கள் பாதுகாப்பு: தமிழகத்தை புகழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com