\
குற்றவாளி ராஜ்குமார்
குற்றவாளி ராஜ்குமார்pt desk

சென்னை: மூன்றாவதும் பெண் குழந்தை - ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!

பிறந்து ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தை வயிற்றில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (38) - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மாத இறுதியில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Child murder
Child murderfile

கடந்த 7-ம் தேதி காலை வீட்டில் குளித்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது பிறந்து ஒன்பது நாட்களேயான குழந்தையின் வயிற்றில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 9ஆம் தேதி குழந்தை உயிரிழந்தது.

குற்றவாளி ராஜ்குமார்
கோவை: கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதிய விபத்து - இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ப்ரதிஷ்டா என்பவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தையின் தந்தை ராஜ்குமார் கத்திரியால் மூன்று முறை குழந்தையை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Arrested
Arrestedfile

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த வியாசர்பாடி போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com