\
Tragedy
Tragedypt desk

கோவை: கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதிய விபத்து - இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

கோவையில் அதிவேகமாக வந்த கார் சாலையின் மையத்தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Published on

செய்தியாளர்: ஐஷ்வர்யா

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் விஷால் (21). இவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது நண்பர்களான திருப்பூரை சேர்ந்த பூபேஷ் (19), நரேன் (19), பிரண்வ் (20) மற்றும் இப்ராகிம் (20) ஆகிய ஐந்து பேரும் காரில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றனர். அப்போது கார் கணியூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மையத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

death
deathpt desk

இதில் விஷால், பூபேஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த நரேன், பிரண்வ் மற்றும் இப்ராகிம் ஆகிய 3 பேரையும் மீட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tragedy
பிராங்கால் ஏற்பட்ட விபரீத விளைவு.. மும்பை கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com