சென்னை | ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் நூதன மோசடி – ஒருவர் கைது
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
செம்பியம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு (35) என்பவர் சென்னை வடக்கு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், Chatting App Global Market, Spreatex Market Tradingல் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்ததை நம்பி நம்பி Global Market தனது சுயவிவரங்களை பதிவு செய்து தன்னுடைய SBI வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,52,130 மூதலீடு செய்துள்ளார்.
அதேபோல், தனது தாயார் பானுமதி என்பவரின் SBI வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4,20,304 என மொத்தம் ரூ.22,72,434 முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், தன்னால் தனது முதலீட்டு பணத்தினை திரும்பப் பெற இயலவில்லை என்றும், தன்னை ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றிய நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து தான் இழந்த பணம் ரூ.22,72,434 மீட்டுத் தரும்படி தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வடக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றின் விவரங்கள் மற்றும் அதன் Network User ID முகவரி ஆகியவற்றை ட்ராக் செய்து உத்தண்டி பகுதியைச் சேர்ந்த முத்து மாணிக்கம் (55) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.