இளைஞர் கைதுpt desk
குற்றம்
திருவண்ணாமலை | வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததாக இளைஞர் கைது
செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடியை வளர்த்ததாக இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: மா.மகேஷ்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சி பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ் (27). இவர் தனது வீட்டில் தண்ணீர் கேனை பயன்படுத்தி இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக செங்கம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
Arrestedpt desk
இதையடுத்து இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரண்டு அடி உயரம் வளர்க்கப்பட்ட இரு கஞ்சா செடிகளை அழித்தனர். இதைத் தொடர்ந்து லோகேஷ் என்பவரை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.