சென்னை | பெண் ஐடி ஊழியரிடம் அத்துமீற முயற்சி – உணவு டெலிவரி செய்யும் இளைஞர் கைது
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை மடிப்பாக்கம் வடக்கு ராம் நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் (30), உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மடிப்பாக்கம் குபேரன் நகரில் பெண் நண்பர்களுடன் வசித்து வரும் ஐடி பெண் ஊழியர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்பொழுது அந்த பெண்ணிடம், மொபைலில் சார்ஜ் இல்லை உங்களுடைய வீட்டில் போட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுள்ளார்.
இதற்கு அந்தப் பெண் சம்மதித்த நிலையில், திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த அவர், அந்தப் பெண்ணிடம் சமையலுக்கு உதவி ஏதாவது செய்ய வேண்டுமா சொல்லுங்கள் நான் செய்து தருகிறேன் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போடவே அந்த ஊழியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து நேற்று முன் தினம் மீண்டும் அதே வீட்டில் வசிக்கும் அந்தப் பெண்ணிற்கு உணவு டெலிவரி கொடுக்கச் சென்றுள்ளார். அப்போதும் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த பெண் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீஸார் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர் .