ஓடும் ரயிலை நிறுத்தி 4.5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்புpt desk
தமிழ்நாடு
ஈரோடு | ஓடும் ரயிலை நிறுத்தி 4.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞர்
ஈரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பயணியின் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியைச் சேர்ந்த துளசிமணி என்பவர் தனது உறவினர்கள் 34 பேருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்றுவிட்டு ரயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது, ரயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ரயில் மெதுவாக சென்றபோது, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த துளசிமணி என்பவரது கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை இளைஞர் ஒருவர் பறித்துக்கொண்டு கீழே குதித்து தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து துளசிமணி ஈரோடு இருப்புப்பாதை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.