ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி
ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சிpt desk

சென்னை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி – ஒருவர் கைது

ஏடிஎம் மெஷினை உடைத்து திருட முயன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை அம்பத்தூர் ஒ.டி பேருந்து நிலையம் அருகே பிரபல தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ளேயே, ஏ.டி.எம் மற்றும் சி.டி.எம் இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில், நள்ளிரவு, 12.45 மணியளவில், ஏ.டி.எம்-க்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், இயந்திரத்தின் அடிப்பகுதியை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

Police station
Police stationpt desk

இந்த கொள்ளை முயற்சி ஹரியானாவிலுள்ள தலைமை அலுவலத்திற்கு தெரிய வரவே, அவர்கள் கிளை மேலாளர் சுதாகர் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த அந்நபரை அடையாளம் கண்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி
கள்ளக்குறிச்சி: தெருநாய் கடித்ததில் மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்

விசாரணையில், அவர் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com