திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டி
திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டிpt desk

சென்னை| வீட்டினுள் புகுந்து நகையை திருடிவிட்டு தப்பிக்க முயன்ற மூதாட்டி - மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

சென்னை மாங்காடு அருகே வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில், சர்வ சாதாரணமாக நகையை திருடிவிட்டு தப்பிக்க முயன்ற மூதாட்டியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பெண் ஒருவர் சமையலறையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்த மூதாட்டி நகையை திருடிக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மூதாட்டியை சோதனை செய்ததில், 4 பவுன் நகை மற்றும் சில்லறை காசுகளை கைப்பையில் வைத்திருந்தது தெரியவந்தது.

Police station
Police stationpt desk
திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டி
பெங்களூரு | பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. என்ன நடந்தது?

மேலும், அவர் வைத்திருந்த பையில் எந்தெந்த வீடுகளில் திருட வேண்டும் என முகவரியுடன் எழுதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் மயக்கமடைவதை போல் நடித்த மூதாட்டியை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com