பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்pt desk

பெங்களூரு | பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. என்ன நடந்தது?

பெங்களூருவில் ஆட்டோ புக்கிங்கை ரத்து செய்ததாகக் கூறி பெண்ணை தாக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
Published on

இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் பயணிப்பதற்காக ஓலா செயலியில் ஆட்டோ புக் செய்துள்ளார். பீக் ஹவர் என்பதால் இருவரும் தங்கள் செல்போனில் ஆட்டோ புக் செய்ய, அதில் முதலில் வந்த வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு ஆட்டோ புக்கிங்கை அவர்கள் ரத்து செய்ததாக தெரிகிறது.

பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்pt desk

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பெண்கள் பயணித்த ஆட்டோவை பின்தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் வாகனத்தை மறித்த அவர், பெண்களிடம் ஆவேசமாக பேசி கடுமையாக நடந்துகொண்டார். இதையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண், செல்போனில் வீடியோ எடுக்க, ஆட்டோ ஓட்டுநர் அவரை தாக்கினார்.

பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
திடீரென கேட்ட அழுகுரல்.. குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தை! நடந்தது என்ன?

இந்த காட்சி இணையத்தில் வைரலான நிலையில், விசாரணை நடத்திய மாகடி போலீசார், பெண்ணை தாக்கிய ஓட்டுநர் முத்துராஜ் என்பவரை கைது செய்தனர்.

பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
தவெக மாநாட்டுக்கு வேண்டுமென்றே தடையா? விஜய்க்கு ஆதரவாக தலைவர்கள் கருத்து; திமுக தரப்பின் பதில்என்ன?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com