கத்திக்குத்து சம்பவம் | போலீசாரிடம் நடிகர் சயீஃப் அலிகான் வாக்குமூலம்!
“திடீரென கேட்ட அலறல் சத்தத்தால் விழித்துக்கொண்டேன்” என வாக்குமூலத்தில் நடிகர் சயீஃப் அலிகான் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிஃபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்பவர் கத்தியால் குத்தியதில் சயீஃப் அலிகான் படுகாயம் அடைந்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அந்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அலறல் சத்தம் கேட்டு எழுந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.
அந்தச் சத்தம் தனது மகனின் அறையில் இருந்த வந்ததால் அங்கு சென்றதாகவும், அப்போது மகன் அழுதுகொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் தன்னை திடீரென தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சயீஃப் அலிகான் வீட்டுக்கு 2 காவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சயீஃப் அலிகானை தாக்கிய ஷரிஃபுல் இஸ்லாமின் போலீஸ் காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.