Police stationpt desk
குற்றம்
செங்கல்பட்டு: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது
செங்கல்பட்டு அருகே போக்சோ வழக்கில் மூன்று பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பத்தாம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதை வீடியோ பதிவு செய்த மாணவர்கள், மற்ற பள்ளி நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
Court name boardpt desk
இந்த வீடியோ குறித்து, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், நேற்று மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.