விநோதய சித்தம் பட நடிகைக்கு தொடர் தொல்லை; போலீசாரின் விசாரணையில் சிக்கிய முன்னாள் கார் டிரைவர்!

விநோதய சித்தம் திரைப்படத்தின் கதாநாயகி ஷெரினாவிற்கு தொலைப்பேசி வாயிலாக தொல்லை கொடுத்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார் டிரைவர் கைது
கார் டிரைவர் கைதுபுதிய தலைமுறை

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை செல்வி ஷெரின். 'பிக் பாஸ் சீசன் -6' ல் போட்டியாளாராகவும், நடிகர் சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோர் நடித்த 'வினோதய சித்தம்' திரைப்படத்தில் நாயகியாவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை செல்வி ஷெரினின் சகோதரர் கௌரி குருபரன் என்பவர் அண்ணா சாலை காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், நடிகை செல்வி ஷெரினுக்கு தொடச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர் யார்? என விசாரித்த போது முன்பு கார் ஓட்டுநராக இருந்து வந்த கார்த்திக் என தெரியவந்ததாகவும், இது குறித்து ஓட்டுநர் கார்த்திக்கிடம் கேட்டப்போது, அவரது நண்பரோடு வீட்டுக்கு வந்து நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாக நடக்க முயன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், வீடு தேடி வந்து பிரச்சனை ஈடுபடுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரை தேடி வந்தனர். கார் ஓட்டுநர் கார்த்திக்கின் நண்பரான இளையராஜாவை நேற்று சென்னையில் கைது செய்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை பகுதியில் கார்த்திக் தலைமறைவாக இருக்கும் விபரத்தை அவரது நண்பர் மூலம் அறிந்த போலீசார் அவரை பிடிப்பதற்காக மயிலாடுதுறை விரைந்தனர். போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்து கொண்ட கார்த்திக் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். நீதிபதி 12-ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் தற்போது கார்த்திக்கு சென்னை அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com