2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இளைஞர் வெட்டிக்கொலை!

2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இளைஞர் வெட்டிக்கொலை!
2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இளைஞர் வெட்டிக்கொலை!

நன்னிலம் அருகே பழிக்கு பழியாக நடைபெற்ற படுகொலை சம்பவம் தொடர்பாக 7 பேர் உசிலம்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்துள்ள மணவாள நல்லூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் நேற்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குடவாசல் போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், படுகொலை தொடர்பாக திருவாரூரை அடுத்துள்ள மணவாள நல்லூரைச் சேர்ந்த பிரபாகரன், சாமிநாதன், வெங்கடேஷ், ரமேஷ், கணபதி, தீபக் மற்றும் நாடாக்குடியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய 7 பேர் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்பு சரண்டைந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இருந்த சந்தோஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்கு பழியாக இந்த சந்தோஷ் படுகொலை அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com