ஆம்பூர்: போலி ஆவணங்களை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி – தணிக்கை அதிகாரியின் புகாரின் பேரில் 5 பேர் கைது

ஆம்பூரில் உள்ள தனியார் வங்கியில் போலியான ஆவணங்களை தயாரித்து இல்லாத இடத்திற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய கணவன், மனைவி மற்றும் வங்கி கிரெடிட் மேலாளர் உட்பட 5 பேர் கைது. இவ்விவகாரத்தில் வங்கி மேலாளர்கள் இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் - மஞ்சுளா தம்பதியர். இவர்கள் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 26.12.2019 ஆம் தேதி வங்கி ஊழியர் ராஜி மற்றும் மேலாளர்கள் மூலம் இல்லாத இடத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து தனியார் வங்கி தணிக்கை துறை அதிகாரி கார்த்திகேயன், சரவணன் வாங்கிய கடன் தொகையை திருப்பிக் கட்டாததது குறித்து தணிக்கை செய்தனர்.

Arrested
Arrestedpt desk

அப்போது சரவணன், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் வங்கி ஊழியர் ராஜி ஆகியோர் இல்லாத இடத்திற்கு போலி ஆவணங்கள் மூலம் வங்கி மேலாளர்கள் உதவியுடன் 10 லட்சம் கடன் பெற்றது தணிக்கை துறை அதிகாரியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சரவணன் அவரது மனைவி மஞ்சுளா, வங்கி ஊழியர் ராஜி மற்றும் வங்கி கிரெடிட் மேலாளர்கள், விநாயக மூர்த்தி, மஞ்சுநாதன் மற்றும் மேலாளர்கள் கார்த்திக் மற்றும் மதன்குமார் ஆகிய 7 பேர் மீது திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்,

Accused
’அடப்பாவிகளா.... இப்படியா திருடுவீங்க?'- சினிமா பாணியில் நடந்த திருட்டு

புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரவணன் அவரது மனைவி மஞ்சுளா, வங்கி ஊழியர் ராஜி, வங்கி கிரெடிட் மேலாளர்கள் விநாயக மூர்த்தி, மற்றும் மஞ்சுநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தனியார் வங்கி மேலாளர்கள் கார்த்திக் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com