திருடர்கள்
திருடர்கள்Facebook

’அடப்பாவிகளா.... இப்படியா திருடுவீங்க?'- சினிமா பாணியில் நடந்த திருட்டு

திருடர்களின் திருட்டு வகையானது தினமும் நமக்கு ஒரு எச்சரிக்கையை தந்துக்கொண்டுதான் இருக்கிறது.
Published on

'திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்- அதை சத்தம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும் 'என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப... திருடர்களின் திருட்டு வகையானது தினமும் நமக்கு ஒரு எச்சரிக்கையை தந்துக்கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் திரைப்பட பாணியில் ஓடும் லாரியிலிருந்து பொருட்களை திருடிய கும்பல் ஒன்றை காரில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் டிப்பர் லாரி ஒன்று பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆக்ரா நோக்கி வேகமாகச் செல்கிறது. அதைத் துரத்திக் கொண்டு இருசக்கரவாகனம் ஒன்று பின்னால் செல்கிறது. எதற்காக இரு சக்கரவாகனம் பின்னால் செல்கிறது என்று நினைக்கும் தருவாயில், லாரியின் மேல் இருந்த இருவர், அங்கிருக்கும் பொருட்களை திருடி கீழே வீசிவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் லாரியிலிருந்து இறங்கி லாவகமாய், இருசக்கர வாகனத்தில் அமர்ந்துக்கொண்டார்கள்.

இதைப்பார்த்ததும், ’அடப்பாவிகளா.... இப்படியா திருடுவீங்க...’ என்று,நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com