சென்னை: மது போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல் - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

கோடம்பாக்கத்தில் தெருக்களில் நிறுத்தப்பட்டு இருந்த 15-க்கும் மேற்பட்ட பைக்குகளை அடித்து நொறுக்கியதாக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை கோடம்பாக்கம் சுபேதர் கார்டன், வரதராஜ பேட்டை, மற்றும் ட்ரஸ்ட் புரத்தில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மது போதையில் இளைஞர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன், முருகலிங்கம், இம்ரான், ஆசைபாண்டி உள்ளிட்ட 5 பேர் அங்கு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை கண்டித்துள்ளனர்.

Bike
Bikept desk

அப்போது, அந்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், அங்கிருந்த மாவுக்கடை மற்றும் மளிகை கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி மாமூல் கேட்டு மிரட்டியதோடு தாமஸ் என்பவரையும் கத்தியால் வெட்டியுள்ளனர். அங்குள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோடம்பாக்கம் போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

Accused
சென்னை: ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் தரகர்.. 7 பேர் கைது

இதையடுத்து லேசான காயமடைந்த தாமஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கோடம்பாக்கம் வரதராஜ பேட்டையைச் சேர்ந்த குகன் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com