சென்னை: ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் தரகர்.. 7 பேர் கைது

பிளஸ் டூ படிக்கும் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் தரகர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்pt web

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலம் புகார் வந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வராணி குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவரை பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், இன்னொரு பகுதியைச் சேர்ந்த பெண் தரகர் ஒருவரையும் அவரது சகோதரியையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்
சென்னை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு

பெண் தரகரின் மகள் தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் நிலையில், அவருடன் படிக்கும் வறுமையில் உள்ள மாணவிகள், தனித்து வாழும் பெண்களின் மகள்களை குறிவைத்து இந்த கும்பல் வலைவீசியுள்ளது. படித்துக்கொண்டே பகுதிநேர வேலை செய்யும் மாணவிகளையும் சம்பாதிக்கும் ஆசை காட்டி செலவுக்கு 500, ஆயிரம் ரூபாய் என பணம் கொடுத்து இந்த பெண்மணி தனது வலைக்குள் கொண்டுவந்தது உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இதையடுத்து, விபச்சார தடுப்புப் பிரிவில், குழந்தைகள் நலக்குழு அதிகாரி பாலகுமார் அளித்த புகாரில் 70 வயது நபர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 7 செல்போன்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலால் பள்ளி மாணவிகள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ரகசியமாக பட்டியலிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்
நான்கு ஆண்டுகளில் இத்தனை கொலைகளா? கொலை நகராக மாறுகிறதா நெல்லை? RTI-ல் அதிர்ச்சி தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com