குற்றம்
திருவள்ளூர்: காவல்துறையினரின் என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவல்துறையினரால் என்கவுன்டர் மூலமாக 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் முத்து சரவணன் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சதீஷ் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவரும், பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள்.

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட முத்து சரவணன், சதீஷ்
முத்து சரவணன் மீது 7 கொலை வழக்குகளும், சதீஷ் மீது 5 கொலை வழக்குகளும் உள்ளன. கொல்லப்பட் இருவரின் உடல்களும், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.