மயிலாடுதுறை: சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 2200 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது

சீர்காழி அருகே புதுச்சேரியில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 2200 மதுபாட்டில்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ஆர்.மோகன்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்கள் கடத்திவரப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் லாமேக் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் தனிப்படை உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Accused with police
Accused with policept desk

அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். ஆனால், போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதனால் போலீசார், காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

Accused
திருப்பத்தூர்: ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

பின்னர் காரை சோதனை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட 2200 மது பாட்டில்கள் அதில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மது பாட்டில்களுடன் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், காரைக்கால் வரிச்குடியை சேர்ந்த திலீப் குமார், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com