தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 862 என குறைவு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 862 என குறைவு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 862 என குறைவு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,023 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 862 என பதிவாகியுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் பாதிப்பு 875 என பதிவாகியிருந்தது. இன்றைய எண்ணிக்கை மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,08,230 என்றாகியுள்ளது. இதுவரை செய்யப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5,18,30,749 என்றாகியுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 122 பேர்; கோவை - 99 பேர்; செங்கல்பட்டு 79 பேர்; ஈரோடு - 67 பேர்; திருப்பூர் - 60 பேர்; சேலம் - 54 பேர்; நாமக்கல் - 39 பேர்; திருவள்ளூர் - 34 பேர்; தஞ்சை, திருச்சி - 30 பேர் ஆவர். இன்று பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 58 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,009 ஆகும். இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,61,428 என்றாகியுள்ளது. தற்போதைக்கு சிகிச்சையிலிருப்போர் 10,588 பேர்.

போலவே கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 தனியார் மருத்துவமனையையும் , 3 பேர் அரசு மருத்துவமனையையும் சேர்ந்தவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 36,214 என்றாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com