இந்தியாவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபுறம் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 558 நாட்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்புப்படி 6 ஆயிரத்து 822 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இறப்புகள் எண்ணிக்கை 220 ஆக இருந்ததாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுவரை 128 கோடியே 76 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.