கொரோனா வைரஸ்: எந்தெந்தப் பொருட்களில் எத்தனை மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும்?

கொரோனா வைரஸ்: எந்தெந்தப் பொருட்களில் எத்தனை மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும்?

கொரோனா வைரஸ்: எந்தெந்தப் பொருட்களில் எத்தனை மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும்?
Published on

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கிருமி குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த வைரஸ் சூழலியல் ஆய்வகத்தின் தலைவர் வின்சென்ட் முன்ஸ்டெர், கொரோனா கிருமி எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை விவரித்துள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்டவரிடமிருந்து வெளியேறும் கொரோனா கிருமிக்கு சில பொருட்கள் புகலிடமாக உள்ளன. டீ, காபி பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகளில் 24 மணி நேரம் வரை கொரோனா கிருமி படிந்திருக்கும். பிளாஸ்டிக் பாட்டில்களில்  அதிகப்பட்சமாக 3 நாட்கள் வரை கொரோனா வைரஸ் கிருமி உயிர்ப்புடன் இருக்கும் என்கிறார் ஆய்வாளர் வின்சென்ட்.

தாமிரத்தால் ஆன பொருள்களில் 4 மணி நேரமும், எவர் சில்வரால் ஆன பொருள்களில் 13 மணி நேரமும், பாலி புரொபைலின் வகை பிளாஸ்டிக் பொருள்களில் 16 மணி நேரமும் கொரோனா கிருமி உயிர்ப்புடன் இருக்கும்.

இப்படி கண்ணுக்கு தெரியாமல் கொரோனா கிருமி படர்ந்திருக்கும் பொருட்களை நாம் தொடுவது நிகழக்கூடும் என்பதால்தான், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 23 முறை நாம் நமது முகங்களை கைகளால் தொடுகிறோம் என்கிறது ஆய்வு.

கண், மூக்கு பகுதிகளை சில விநாடிகளுக்குள் தலா 3 முறையும்‌, காது பகுதிகளை ஒரு முறையாவது தொட்டு விடுகிறோம். வாய், கன்னம், தாடை அவற்றோடு தலைமுடியையும் தலா நான்கு முறை விரல்களால் தொடுகிறோம். கொரோனா வைரஸ் படர்ந்துள்ள பொருட்களை தொட்டுவிட்டு, முகப் பகுதிகளை தொடுவதன் மூலம் வைரஸ் கிருமி பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

பல ஆயிரமாயிரம் வைரஸ் துகள்கள் உடலுக்குள் சென்றால் மட்டுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை நேரடியாக சந்திக்கும்போது பெரிய அளவு பாதிப்பு நிகழும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நோயாளிகள் மீண்டு வந்தாலும், அவர்களது உடலில் அந்த வைரஸ் கிருமி 8 முதல் 37 நாட்கள் தங்கியிருக்கும் என்பது கூடுதல் அதிர்ச்சித் தரும் தகவலாக உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com