\
தமிழகத்தில் தொடர்ந்து 31-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து 31-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து 31-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
Published on

தமிழகத்தில் நேற்றைய தினம் 1,140 என பதிவான தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை, இன்று சற்று குறைந்து 1,127 என பதிவாகியுள்ளது. தொடர்ந்து 31 ஆம் நாளாக இன்றும் பாதிப்பு குறைந்திருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,24,177 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,127 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருப்பதாக மருத்துவத்துறை சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இதில் சென்னையிலும் (146 பேர்) கோவையிலும் (128 பேர்) மட்டுமே 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்திருக்கிறது. இன்று உறுதியானவர்கள் எண்ணிக்கையோடு சேர்த்து இதுவரை தமிழகத்தில் மொத்தம் 26,95,216 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,358 பேர் கொரோனாவிலிருந்து மீண்டிருப்பதால் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 13,034 என்றாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் தமிழகத்தில் 15 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 36,019 என்றாகியுள்ளது. இன்று இறந்தவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com