சென்னையில் 190, கோவையில் 170 பேருக்கு இன்று கொரோனா உறுதி - மாவட்ட வாரியாக முழு நிலவரம்
தமிழத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,612-ல் இருந்து 1597ஆக குறைந்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 1,53,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,597ஆக உள்ளதாகவும், சென்னையில் ஏற்கெனவே 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் மேலும் 25 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,603ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,099 ஆக உள்ளது. அதேபோல் கொரோனாவில் இருந்து மேலும் 1,623 பேர் குணமடைந்த நிலையில், 26,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.