மும்பையில் 89 சதவீத கொரோனா நோயாளிகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பை மாநகராட்சி சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, 280 கொரோனா வைரஸ் மாதிரிகளில் 248 மாதிரிகள் (89%) ஒமைக்ரான் வகையை சேர்ந்ததாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 சதவீத மாதிரிகள் டெல்டா வகைகளை சேர்ந்ததாக இருந்துள்ளது.
வயது அடிப்படையிலான பாதிப்பை பார்க்கும்போது, 280 நோயாளிகளில் 96 நோயாளிகள் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் 79 நோயாளிகள் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்; 22 நோயாளிகள் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்ட 174 கொரோனா நோயாளிகளில், 89 நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. இதில், 2 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்போர்ட் தேவைப்பட்டது. 15 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.
மொத்த நோயாளிகளில் 99 நோயாளிகள் கொரோனா தடுப்பூசி எடுக்கவில்லை. இதில் 76 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 12 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்போர்ட் தேவைப்பட்டது மற்றும் 5 நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.