ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ.. ஒரிஜினல் வீடியோவில் இருந்தவர் கொடுத்த விளக்கம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், ஒரிஜினல் வீடியோவை வெளியிட்ட பெண் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
rashmika mandhana deep fake video
rashmika mandhana deep fake videofile image

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் டீப் ஃபேக் முறையில் மாற்றப்பட்ட அவரது போலி வீடியோ ஒன்று இரு தினங்களுக்கு முன்பாக சமூகவலைதலங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டது.

இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் பதிவிட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, “நான் வேதனைப்படுகிறேன். இதுகுறித்து பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. ஆன்லைனில் பரப்பப்படும் இதுகுறித்த வீடியோ பற்றி பேசப்பட வேண்டும். இதுபோன்ற வீடியோ எனக்கு மட்டுமல்ல. இவ்வாறு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், இன்று நம் ஒவ்வொருவருக்கும் பயமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எனக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அதேநேரத்தில் இப்படியொரு விஷயம், நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் காலத்தில் நடந்திருந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதுபோன்ற பாதிப்பால், நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, இதை அனைவரும் அவசரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

rashmika mandhana deep fake video
"நான் வேதனைப்படுகிறேன்; பயமாக இருக்கிறது" - Deep fake வீடியோ.. நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவு

முன்னதாக ராஷ்மிகாவுக்கு ஆதரவாக அமிதாப் பச்சன், ம்ருனால் தாக்கூர், நாக சைதன்யா மற்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அதிலும் குறிப்பாக, “போலியாக வீடியோ சித்தரித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

rashmika mandhana deep fake video
போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை: மத்திய அரசு எச்சரிக்கை!

இந்த வரிசையில், ராஷ்மிகாவின் இந்த டீப் ஃபேக் வீடியோ தொடர்பாக தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் வீடியோவில் இடம்பெற்ற பெண் ஜாரா பட்டேல். அவர் இஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “என்னுடைய உடலையும், பிரபல பாலிவுட் நடிகை ராஷ்மிகாவின் முகத்தையும் வைத்து டீப் ஃபேக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்கிறது.

zaara patel
zaara patel

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பெண்களின் எதிர்காலம் குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. இணையத்தில் பார்ப்பவற்றை ஒருமுறை ஃபேக்ட் செக் செய்யுங்கள். இணையத்தில் இருப்பவை எல்லாம் உண்மையானவை அல்ல” என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்டுள்ள இவர், அவ்வப்போது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com