\
யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜாU1 Records / Yuvan Shankar Raja

’கல்யாண மேடையில் பாடிய யுவன் சங்கர் ராஜா..’ ரசிகர்கள் அதிர்ச்சி!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டு திருமணத்தின் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
Published on: 
Summary

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திருமண நிகழ்ச்சியில் பாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. யுவனின் இந்த செயல் ரசிகர்களிடையே கலவையான கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மற்றவர்கள் இதை சாதாரணமாக பார்க்கின்றனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகள் கொண்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான இவர், தமிழ் சினிமாவில் மேற்கத்திய இசை வடிவங்களை பரவலாக்கிய பெருமைக்குரியவர். குறிப்பாக, தமிழ் இசைத்துறையில் Hip-hop, EDM மற்றும் Jazz போன்ற இசை வகைகளை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் நெஞ்சங்களில் இசை இளவரசனாக இடம்பிடித்தவர்ர்.

நா.முத்துக்குமார்-யுவன் சங்கர் ராஜா
நா.முத்துக்குமார்-யுவன் சங்கர் ராஜாயுவன் சங்கர் ராஜா

1997ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் அறிமுகமான யுவன், இதுவரை 190க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான்கள் வரிசையில் இளையராஜா, ஏஆர் ரஹ்மானுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுக்கும் ஒரு இடம் இருக்கிறது. இளையராஜாவை போல யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவே ஓடிய திரைப்படங்களும் இருக்கின்றன. அந்தளவு இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த பல இசை ஆல்பங்களை யுவன் கொடுத்துள்ளார்.

இந்தசூழலில் தான் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் யுவன் சங்கர் ராஜா, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாடியது ரசிகர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமண விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கனிமொழி, வைரமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாட்டு பாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

திருமண மேடையில் யுவன் பாடியதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள், யுவன் நீங்க என்ன பண்றீங்க இங்க என்றும், ஒரு காலத்தில் எப்படி இருந்தவர், இப்போது இந்த நிலைமைக்கு வந்துவிட்டார் என்றும், ரசிகர்களை வேதனை படுத்தாமல் இருங்கள் என்றும் எமோசனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில் இப்படி திருமண நிகழ்ச்சிகளில் இசையமைப்பது சாதாரணம் தான் என்றும், ஏஆர் ரஹ்மான் அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் இசையமைத்திருக்கிறார் என்றும், இது பணத்திற்காக இருக்காது என்றும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா
”நீ கரியர் ஓட உச்சத்துல இருக்க..” சூர்யாவின் சீன் பட ட்ரெய்லரில் விஜய் Reference!