\
surya scene movie trailer released
surya scene movie trailer releasedscene movie trailer screenshot

”நீ கரியர் ஓட உச்சத்துல இருக்க..” சூர்யாவின் சீன் பட ட்ரெய்லரில் விஜய் Reference!

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சீன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
Published on: 
Summary

சூர்யாவின் 47வது திரைப்படமான 'சீன்' ட்ரெய்லர் வெளியீடு ரசிகர்களை கவர்ந்துள்ளது. தீபாவளி வெளியீடாக வரும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாகவும், சைக்கோ வில்லனுடன் மோதும் கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. 'அரசியல்ல சேர போறன்' எனும் சூர்யாவின் வசனம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் சீன் (SCENE).  சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை ரோமஞ்சம், ஆவேசம் படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கியுள்ளார்.

சுர்யாவின் சீன் திரைப்படம்
சுர்யாவின் சீன் திரைப்படம்SCENE Movie

இப்படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரைப்பட வெளியீட்டிற்கு முன்னதாக ட்ரெய்லர் விடப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ட்ரெய்லரை பொறுத்தவரை ‘இன்பராஜ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, தான்தான் பெரியவன் என்ற ஈகோவுடன் வலம்வரும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு இணையாக டஃப் கொடுக்கும் சைக்கோ வில்லனாகவும், முடிவில் இருவருக்கான மோதல் என்னவாகிறது என்பது போல உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இன்பராஜ் கதாபாத்திரம் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்வதாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. லால் அதற்கு ’நீ இப்போ கரியர் ஓட உச்சத்துல இருக்க, இப்ப ராஜினாமா பண்ணிட்டு என்ன பண்ண போற..?’ எனக் கேட்கிறார், அதற்கு சூர்யா “அரசியல், அரசியல்ல சேர போறேன்” என்று பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.

surya scene movie trailer released
’அஜித் பாணியை கையிலெடுத்த சூர்யா..’ புதிய படத்திற்கு ‘SCENE' என பெயர் அறிவிப்பு!