அர்ஜுனன் பேர் பத்து - யோகிபாபு
அர்ஜுனன் பேர் பத்து - யோகிபாபுweb

யோகி பாபுவின் 300-வது திரைப்படம்.. கவனம் ஈர்க்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ டீசர்!

யோகிபாபுவின் நடிப்பில் வெளியான கெணத்த காணோம் ரிலீஸை தொடர்ந்து, தற்போது அவருடைய 300வது படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
Published on
Summary

யோகிபாபுவின் 300வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யோகிபாபு காமெடி ரோலை தவிர்த்து, சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வண்டியை திருடும் கும்பலின் சிக்கலில் சிக்கிய யோகிபாபு, தனது வண்டியை மீட்டாரா என்பதே திரைக்கதையாக இருக்கும் என டீசர் மூலம் தெரிகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. காமெடி நிகழ்ச்சியான `லொள்ளு சபா' மூலம் பிரபலமான பாபு, 2009ல் அமீர் நடித்த `யோகி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் யோகி பாபு ஆனார்.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து ஈர்த்தவர், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஷாரூக்கானின் `சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமானார். மலையாளத்தில் `Guruvayoor Ambalanadayil' படம் மூலமும், கன்னடத்தில் `Mark' படம் மூலமும் அறிமுகமானார். தெலுங்கில் `Jai Hind 2', `Kaki: Sound of Warning', `Gurram Paapi Reddy', `Couple Friendly' போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் திரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்து வரும் `Aadarsha Kutumbam House No: 47' படத்தில் ஒரு முக்கிய பார்த்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

யோகிபாபு நடித்துள்ள 'கெணத்த காணோம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
யோகிபாபு நடித்துள்ள 'கெணத்த காணோம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

இப்படி பல்வேறு மொழிகளிலும் பிஸி நடிகராக இருந்துவரும் யோகி பாபுவின் 300வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அர்ஜுனன் பேர் பத்து - யோகிபாபு
துரந்தர் 2 வெளியாவதில் சிக்கல்.. அடுத்தடுத்து ரத்தாகும் காட்சிகள்! என்ன நடந்தது..?| Dhurandhur 2

யோகிபாபுவின் 300வது திரைப்படம்..

யோகிபாபுவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கெணத்த காணோம் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவருடைய 300வது திரைப்படமான அர்ஜுனன் பேர் பத்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

யோகிபாபு
யோகிபாபு

டீசரை பொறுத்தவரையில், காமெடி ரோலை தவிர்த்து ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். கடினப்பட்டு ஒரு வண்டியை வாங்கும் யோகிபாபுவிடம் இருந்து திருடிச்செல்லும் கும்பல், ஒரே வண்டியை பலபேரிடம் விற்று சுத்தலில் விடுகிறது. முடிவில் யோகிபாபு தன்னுடைய வண்டியை மீட்டாரா என்பதே திரைக்கதையாக இருக்கும் என தெரிகிறது. படத்தின் டீசரே திரைப்படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் கட்செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அர்ஜுனன் பேர் பத்து படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட் மற்றும் லெனின் பாரதி முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

அர்ஜுனன் பேர் பத்து - யோகிபாபு
'The Wait Is Over..' சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com