Suriya - Karuppu
Suriya - Karuppuweb

'The Wait Is Over..' சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எப்போ டா வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..
Published on
Summary

சூர்யாவின் 'கருப்பு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம், பல தாமதங்களுக்குப் பிறகு, சூர்யாவின் தரப்பின் முயற்சியால் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக `கருப்பு', `விஸ்வநாத் & சன்ஸ்' ஆகிய இரு படங்கள் வெளியாக தயாராக இருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான `கருப்பு' படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் சில தாமதங்களால் அது நடக்காமல் போனது. அதன்பின் இப்போதுவரை ரிலீஸ் தேதி சிக்கலாகவே இருக்கிறது. `கருப்பு' வெளியாகாததால், வெங்கி அட்லூரி  `விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ரிலீஸும் முடிவாகாமலே இருந்தது.

கருப்பு
கருப்புமுகநூல்

இப்போது இந்த சிக்கல்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. `கருப்பு' வெளியாகும் முன் `விஸ்வநாத் & சன்ஸ்' படம் வருவது பாதிப்பாக அமையும் என்பதால் சூர்யாவின் தரப்பே `விஸ்வநாத் & சன்ஸ்' படத் தயாரிப்பாளரிடம் பேசி இருப்பதாகவும், அதன் பொருட்டு முதலில் `கருப்பு' படத்தை மே மாதம் வெளியிட உள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி கருப்பு படம் தேர்தல் முடிந்த பின்னர் வெளியாகும் என கூறினார்.

இந்தசூழலில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பின் படி சூர்யா - ஆர்ஜே பாலாஜி காம்போவில் உருவாகியிருக்கும் கருப்பு படம் மே 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya - Karuppu
துரந்தர் 2 வெளியாவதில் சிக்கல்.. அடுத்தடுத்து ரத்தாகும் காட்சிகள்! என்ன நடந்தது..?| Dhurandhur 2
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com