\
Will You Become an Actor?” Vijay Asked 13-Year-Old Fahadh
Fahadh Faasil & VijayANI

நீ நடிகராவியா? 13 வயதில் ஃபஹத்திடம் விஜய் கேட்ட அந்த கேள்வி.. இப்போது வைரல்!

13 வயதில் விஜய்யை சந்தித்த ஃபஹத் ஃபாசில்: “நீ நடிகராவியா?” என்று கேட்ட அந்த ஒரு கேள்வி இன்று வைரலாகியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

நடிகர் ஃபஹத் ஃபாசில், தனது சிறுவயதில் நடிகர் விஜய்யை சந்தித்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். அப்போது விஜய் தன்னிடம், எதிர்காலத்தில் நடிகராக வருவீர்களா என்று முதன்முறையாக கேட்டதாக ஃபஹத் தெரிவித்துள்ளார்.

ஃபஹத் ஃபாசிலின் தந்தையும் பிரபல இயக்குநருமான ஃபாசில் இயக்கிய ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, அவர்களது குடும்ப வீட்டில் நடைபெற்றது. 1997-ல் வெளியான இந்தப் படத்தில் விஜய் மற்றும் ஷாலினி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மலையாளத்தில் ஃபாசில் இயக்கிய ‘அனியத்திப்ராவு’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Fahadh Faasil
Fahadh Faasil

அந்த காலகட்டத்தில் 12 அல்லது 13 வயதில் இருந்த ஃபஹத், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தபோது விஜய்யை சந்தித்துள்ளார். இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய அவர், “விஜய் சார் தான் முதலில் என்னிடம், நீங்கள் நடிகராக வருவீர்களா என்று கேட்டார்” என நினைவுகூர்ந்தார்.

அப்போது இருவருக்கும் நீண்ட உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்றும், பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றியே பேசியதாகவும் ஃபஹத் கூறினார். மேலும், ஃபாசில் இயக்கிய ‘கண்ணுக்குள் நிலவு’ படப்பிடிப்பின்போது விஜய், தான் அடுத்து நடிக்கத் திட்டமிட்டிருந்த ‘குஷி’ திரைப்படம் குறித்தும் தன்னிடம் பேசியதாக அவர் தெரிவித்தார்.

அந்த சிறுவயது சந்திப்பின்போது, விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் அளவுக்கு வளர்வார் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் ஃபஹத் தெரிவித்துள்ளார்.

Fahadh Faasil
Fahadh FaasilScreen SHot (Don't Trouble The Trouble trailer)

இதனிடையே, ஃபஹத் தனது முதல் திரைப்படமான ‘கையெத்தும் தூரத்து’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது குறித்தும் பேசியுள்ளார். அந்தத் தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த அவர், பின்னர் மலையாளத் திரையுலகிற்கு திரும்பி தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்தார்.

தற்போது ஃபஹத், தனது படமான ‘Don’t Trouble The Trouble’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Will You Become an Actor?” Vijay Asked 13-Year-Old Fahadh
விஜய்யின் ஒரு படம்… மாறிப்போன உணவகம்! காஷ்மீரில் ‘LEO’ செய்த மேஜிக்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com