\
Actor Vijay
Actor VijayLokesh Kanagaraj Instagram

விஜய்யின் ஒரு படம்… மாறிப்போன உணவகம்! காஷ்மீரில் ‘LEO’ செய்த மேஜிக்!

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படக் காட்சிகளால், காஷ்மீரின் சாலையோர ‘சிஃபார்’ உணவகம் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
Published on: 
Summary

2023ல் வெளியான விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம், காஷ்மீரின் கான்பால்-பஹல்காம் சாலையில் மட்டன் அருகே உள்ள ‘சிஃபார்’ சாலையோர உணவகத்தை உலகளாவிய சுற்றுலா ஈர்ப்பாக மாற்றியுள்ளது. படத்தில் விஜய் உணவக உரிமையாளராக நடித்த காட்சிகள் காரணமாக, தென்னிந்திய சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து, சூடான சாக்லேட், ட்ரவுட் மீன், செல்ஃபி ஸ்பாட் என ரசிகர்கள் அனுபவிக்கும் இடமாக மாறியுள்ளது.

முதல்வர் விஜய்யின் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படம், காஷ்மீரில் உள்ள ஒரு சாதாரண சாலையோர உணவகத்தை சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. காஷ்மீரின் கான்பால்- பஹல்காம் சாலையில், மட்டன் பகுதிக்கு அருகே அமைந்துள்ள 'சிஃபார்' (Sifar) என்ற உணவகத்தில் லியோ திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

Actor Vijay & Lokesh Kanagaraj
Actor Vijay & Lokesh Kanagaraj Lokesh Kanagaraj Instagram

இப்படத்தில் உணவக உரிமையாளராக விஜய் நடித்திருந்தார். திரைப்படம் வெளியானதில் இருந்து, தென்னிந்தியாவில் இருந்து காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த உணவகத்துக்கு திரளாக வருகை தருகின்றனர். நடிகர் விஜய் படத்தில் சாப்பிட்ட அதே சூடான சாக்லேட் மற்றும் 'ட்ரவுட்' மீன் உணவை ஆர்டர் செய்து ரசிகர்கள் சாப்பிடுகின்றனர். படத்தில் விஜய் உணவகத்திற்குள் நுழையும் காட்சிகளையும், ஜாக்கெட் கழற்றும் பாணியையும் அதே இடத்தில் நின்று நடித்துப் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சிஃபார் உணவகம் ‘லியோ’ ரசிகர்களின் முக்கிய செல்ஃபி ஸ்பாட்டாகவும் மாறியுள்ளது.

விஜய் ரசிகர்களின் வருகையால், உணவகத்தின் பெயரும் ‘லியோ’ படத்துடன் இணைந்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிந்திய சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் செல்லும்போது, இந்த ஷூட்டிங் இடத்தையும் தங்களது பயணப் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.

உணவகத்தின் மேலாளர் சப்சார் அகமத் லோன் பேசுகையில், படப்பிடிப்பின்போது விஜய் மிகவும் எளிமையாகப் பழகியதாகவும், படம் வெளியான பிறகே அவரது அசாத்தியமான ரசிகர் பட்டாளம் பற்றித் தெரிந்ததாகவும் குறிப்பிட்டார்.

Actor Vijay
’இன்னும் 10 வருஷத்துல..’ எதுக்காக இந்த வசனம் வச்சீங்க? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com